Tuesday, 27 September 2016

ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்ய: வரைவு விதிமுறை அறிக்கை வெளியீடு

நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பின் கீழ் பதிவு செய்வதற்கான வரைவு விதிமுறை அறிக்கையை வரித்துறையினர் நேற்று வெளியிட்டனர். ஜிஎஸ்டி கவுன்சிலின் முதலாவது கூட்டம் நடந்து முடிந்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்வது, இன்வாய்ஸ் மற்றும் வரி செலுத்துவதற்கான வரைவு விதிமுறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய உற்பத்தி வரி மற்றும் சுங்கவரி வாரியம் (சிபிஇசி) இதை வெளியிட்டு இது தொடர்பான கருத்துகளை புதன்கிழமைக்குள் தெரிவிக்கும்படி குறிப்பிட்டுள்ளது.
இந்த வரைவு விதிமுறை அறிக்கையின்படி ஆன்லைனில் மூன்று நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். இந்தியர்கள் அல்லாத நிறுவனங்கள் 5 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் செலுத்த வேண்டிய வரித் தொகை முழுவதையும் முன்னதாகவே (அட்வான்ஸ்) செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஜிஎஸ்டியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் இம்மாதம் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி-க்கான விதிமுறைகள் இறுதி செய்யப்படும்.
குறித்த காலத்திற்குள் விண்ணப்பங்களை வரி அதிகாரி பதிவு செய்யாவிடில் அத்தகைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருத வேண்டும் என்றும் வரைவு விதிமுறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பதிவு செய்வோர் தங்களது பான் (நிரந்தர கணக்கு எண்), செல் நம்பர், இணையதள முகவரி உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
வரித்துறை அதிகாரிகள் பான் எண், ஒரு முறை பயன்படுத்தும் சங்கேத குறியீடு, ஆதார் எண் உள்ளிட்ட மனுதாரரின் விவரங்களை பரிசீலிப்பர்.
மனுதாரர் அளித்த அனைத்து விவரங்களும் சரியாக இருப்பின் மூன்று வேலை நாள்களுக்குள் விண்ணப்பம் ஏற்கப்படும்.
விண்ணப்பத்தில் போதிய விவரங்கள் இல்லாமல் போனால் அது குறித்து விண்ணப்பதாரர் களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். உரிய விளக்கங்களைப் பெற்ற பிறகே 7 வேலை நாள்களுக்குள் அது பதிவு செய்யப்படும்.
மொத்தம் 17 விதிகள் கொண்ட 26 விண்ணப்பங்களை பதிவுக்காக சிபிஇசி உருவாக்கியுள்ளது. 5 விதி முறைகள் அடங்கிய இன்வாய்ஸ், 4 விதிகள் மற்றும் 7 விண்ணப் பப் படிவங்கள் பணம் செலுத் துவதற்காக உருவாக்கப்பட் டுள்ளது. இன்வாய்ஸ் படிவத்தில் சரக்குகளின் விவரம், ஹெச்எஸ்என் குறியீடு, சரக்கின் அளவு, ஒவ்வொன்றின் விலை, அளிக்கப்பட்ட சலுகை, சரக்குக் கட்டணம், செலுத்த வேண்டிய வரி, மின்னணு குறியீடு உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.
எலெக்ட்ரானிக் குறியீடு இருப்பதால் சரக்குகள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லும் போது அளிக்கலாம். இது சரக்குகள் எளிதாக கொண்டு செல்ல வழிவகுக்கும்.

http://tamil.thehindu.com/business/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/article9153216.ece

Saturday, 10 September 2016

ஜிஎஸ்டி வரி: லாபமா, நஷ்டமா?

பல ஆண்டு அரசியல் இழுபறிக்குப் பின் ஆகஸ்ட் 3, 2016 (புதன்கிழமை) அன்று மத்திய மாநில அரசுகள் சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்ற புதிய வரியை விதிக்க அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட திருத்தத்தை இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை ஏற்றுக்கொண்டது. இந்த சட்டத் திருத்தம் ஏற்கெனவே மக்களவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வேறு பல நிகழ்வுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு முதல் ஜிஎஸ்டி என்ற புதிய வரி இந்தியாவில் அமலுக்கு வரும். வேறு பல வரிகள் காணாமல் போகும். ஏன் இந்த ஜிஎஸ்டி? ஏன் இவ்வளவு சர்ச்சை? பார்ப்போம்.

GST என்றால் என்ன?

Goods and Services Tax என்பதின் சுருக்கம் தான் GST. சரக்கு மற்றும், சேவை வரி என்று தமிழில் கூறுவர். இந்தியாவில் இதுவரை மத்திய, மாநில அரசுகள் பொருட்கள் மேல் பல வரிகளை விதிக்கின்றன. அவை, (1) பொருள் உற்பத்தி மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி (Excise duty), (2) பொருள் விற்பனை மீது மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி, (3) மாநிலங்களுக்கிடையே விற்பனை நடைபெறும்போது எந்த மாநிலத்தில் விற்பனை ஏற்படுகிறதோ அம்மாநிலத்தால் மத்திய விற்பனை வரி விதிக்கப்படும், (4) சேவைகள் மீது மத்திய அரசு சேவை வரி விக்கிறது, (5) சினிமா போன்ற பொழுபோக்கு வியாபாரத்தின் மீது கேளிக்கை வரி மாநிலங்களால் விதிக்கப்படும், (6) ஒரு மாநிலம் அல்லது ஒரு உள்ளாட்சி தங்கள் பகுதிக்குள் வரும் பொருட்கள் மீது நுழைவு வரி, அல்லது ஆக்ட்ராய் உள்ளது, (6) மாநிலங்கள் விதிக்கும் வாகன வரி, என பல வரிகள் பொருட்கள் சேவைகள் மீது உள்ளன. இவை அனைத்தையும் நீக்கிவிட்டு அனைத்துப் பொருட்கள், சேவைகள் மீது (பெட்ரோல், மது வகைகள் நீங்கலாக) ஒரே வரி நடைமுறைக்கு வரவிருக்கிறது.

புதிய வரியால் நுகர்வோருக்கு என்ன நன்மை?
இப்பொது மத்திய, மாநில அரசுகள் தனித்தனியே பொருட்கள் மீது வரி விதிக்கின்றன. ஒரு பொருள் உற்பத்தி செலவு ரூ 100 அதன் மீது 16 சதம் கலால் வரியை மத்திய அரசு வசூலிக்கிறது. அதாவது ரூ 16. அதன் பிறகு ரூ 116 என்ற விற்பனை விலை மீது 12 சதம் (ரூ 13.92) விற்பனை வரி வசூலிக்கிறது. ஆக, பொருளின் மொத்த விலை ரூ 129.92 ஆகும். இதில் மாநிலங்கள் வசூலிக்கும் விற்பனை வரி மட்டுமே விற்பனை ரசீதில் உள்ளதால், அந்த வரி மட்டுமே நுகர்வோருக்கு தெரிகிறது. இந்த இரு வரிகளையும் இணைத்து GST என்ற ஒரே வரி 20% என்று இருந்தால் பொருளின் விலை ரூ 120 என்று தான் இருக்கும். எனவே, பல பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்பு உண்டு. ஆனால், இதுவரை 14 சதமாக உள்ள சேவை வரி, இனிமேல் GSTயில் 20 சதமாக உயரும்போது சேவைகளின் விலை உயரும். உதாரணமாக தொலைபேசிக் கட்டணம்.

தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?
இதுவரை தமிழகத்தில் உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது 2 சதம் விற்பனை வரியை தமிழக அரசு வசூலிக்கிறது. இதனால் மட்டுமே ரூ 3 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. ஜிஎஸ்டி வந்தால், இந்த வருவாய் இழப்பு ஏற்படும். வேறு பல வரிகளையும் தமிழகம் இழக்கும், எனவே, சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்பது தமிழக அரசின் கணக்கு. இதனை மத்திய அரசு முழுமையாக தரவேண்டும் என்று தமிழகம் கேட்கிறது. மேலும் GST அமல்படுத்துவதால் மாநிலங்கள் தாங்கள் வரி விதிக்கும் அதிகாரத்தை இழப்பதையும் தமிழகம் எதிர்க்கிறது.

என்ன சொல்கிறது மத்திய அரசு?
இப்போது நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்ட திருத்தத்தில் ஒரு மாநிலத்திற்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஐந்து ஆண்டுகள் வரை மத்திய அரசு ஈடு செய்வதாகக் கூறுகிறது. ஆனால், இதனை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக குறைக்க சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்பதை இந்த சட்ட திருத்தம் கூறுகிறது. இது தமிழகத்திற்கு ஏற்புடையதாக இல்லை. இருப்பினும், இப்போது இந்த சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி சிந்திக்க வேண்டும்.

அடுத்தது என்ன?
இந்த அரசியல் சட்ட திருத்த மசோதா மீண்டும் மக்களவையில் நிறைவேற்றபடும். பிறகு குறைந்தபட்சம் 50 சதம் மாநிலங்கள் தங்கள் சட்டசபையில் இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். அடுத்த ஓரிரு மாதங்களில் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 15 மாநிலங்கள் இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிவிடும் என்று மத்திய அரசு உறுதியாக நம்புகிறது.
அதன் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் என்ற குழுவை ஜனாதிபதி உருவாக்குவார். இதில் மத்திய நிதி அமைச்சர் தலைவராகவும், மாநில நிதியமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பர். இந்த ஜிஎஸ்டி கவுன்சில், ஜிஎஸ்டி தொடர்பான சட்டங்கள், வரி விகிதங்கள், வரி வசூலிக்கும் நிர்வாக அமைப்பு ஆகிவற்றை முடிவு செய்து சட்ட முன்வரைவுகளை வழங்கும். இதனை மத்திய, மாநில அரசுகள் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் சட்டங்களாக இயற்றி ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்துவர்.

மத்திய, மாநில அரசுகள் எப்படி இணைந்து செயல்படுத்தும்?

நாடு முழுவதும் ஒரே ஜிஎஸ்டி வரி விகிதம் இருக்கும், உதாரணமாக 20 சதம் என்று வைத்துக்கொள்வோம். இதனை இரு பகுதிகளாக பிரிப்பார்கள். ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்து அதே மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால் அந்த 20 சதம் ஜிஎஸ்டி வரியானது மத்திய ஜிஎஸ்டி என்றும் மாநில ஜிஎஸ்டி என்றும் பிரித்து வரிகள் சமர்பிக்கப்படும். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பங்குகள் செல்லும். மாறாக, ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்து வேறு மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால், அதற்கும் 20 சதம்தான் ஜிஎஸ்டி. அதில் மத்திய பங்கு மத்திய அரசுக்கு செல்லும், ஆனால், மற்றொரு பங்கு எந்த மாநிலத்திற்கு விற்பனை செய்யப்பட்டதோ அந்த மாநிலத்திற்கு செல்லவேண்டும். இதனை ஐஜிஎஸ்டி என்ற பொது கணக்கில் வரவு வைத்து பின்பு பொருள் சென்று சேர்ந்த மாநிலத்தில் உள்ள அரசுக்கு அந்த வரி பணம் சென்று சேரும்.

சிக்கலான வரி செலுத்தும் முறையா ஜிஎஸ்டி?
இதனை எளிமைப்படுத்துவதற்காக ஜிஎஸ்டி நெட்வொர்க் என்ற ஒரு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. இந்த நிறுவனம், முழுவதும் கணினி மயமான வரி செலுத்தும் முறையை ஏற்படுத்திவிட்டது. எல்லா மாநிலங்களுக்கும் தங்கள் வரி வசூலிக்கும் நிர்வாக அலுவலகங்களை கணினிமயமாக்கவும், அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந் நிறுவனம் உதவி செய்கிறது. பல தனியார் கணினி மென்பொருள் நிறுவனங்களும் இந்த வேலையை செய்துள்ளன.
ஜிஎஸ்டி வரியை வங்கிகளில்தான் கட்டவேண்டும், இணையதளம், வங்கி சேவையில் வரி செலுத்துவது ஊக்குவிக்கப்படும். இதற்காக மத்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு தனியான பண வரிவர்த்தனை வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

வியாபாரிகள், சிறு வியாபாரிகள் கவலைப்படலாமா?
இதுவரை பலவித வரிகளை செலுத்திய வியாபாரிகள் இனிமேல் ஒரே ஜிஎஸ்டி வரியை செலுத்தவேண்டும். இது அவர்களின் வரி செலுத்தும் செலவை குறைக்கும். ஆனால் சிறு வியாபாரிகள், கணினி மயமாக்கப்பட்ட ரசீது முறையை, வரி செலுத்தும் முறையை செயல்படுத்த சிரமப்படுவர். இதனை நீக்கும் பொருட்டு மிகச் சிறிய வியாபாரிகளை இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து நீக்கவும் பேசப்படுகிறது.

Thursday, 1 September 2016

G.S.T - ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றப்படும் என்பதில் எந்தத் தடங்கலும் இல்லை. இதைப்பற்றி எல்லாரும் ஆஹா ஓஹோ என்று போற்றுகிறார்களே... இதனால் நமக்கு என்ன பயன் என்று புரிகிற வகையில் எழுதுங்களேன் என்று நண்பர்கள் கேட்டார்கள்.

இது கொஞ்சம் குழப்படியான விஷயம். இந்தியாவில் இதுவரை வழக்கில் இருக்கும் வரிகள் குறித்துத் தெரிந்து கொள்ளாமல் ஜிஎஸ்டி குறித்து புரிந்து கொள்ள முடியாது. எனவே, வரிகள் குறித்து சுருக்கமாகத் தருகிறேன்.

வரிகளில் பல உண்டு. ஆனால் அவை குறிப்பாக இரண்டு பிரிவுகளின் கீழ் வரும் : டைரக்ட் டேக்ஸ் (நேரடி வரி), இன்டைரடக்ட் டேக்ஸ் (மறைமுக வரி).
• நேரடி வரிகள் - வருமான வரி, சொத்து வரி, பரிசுகள் மீதான வரி, செலவு வரி, வட்டி வருமான வரி,கார்ப்பரேட் வரி, போன்றவை.
• மறைமுக வரிகள் - விற்பனை வரி, சேவை வரி, மதிப்புக்கூட்டு வரி (வாட்), கஸ்டம்ஸ் டியூடி, ஆக்டிராய்,எக்சைஸ் வரி போன்றவை.
இவற்றில் சில வரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. சில வரிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை.

எந்தவொரு நாட்டிலும் நேரடி வரிகளின் விகிதம் அதிகமாகவும் மறைமுக வரிகளின் விகிதம் குறைவாகவும் இருப்பதே நல்லது. இந்தியாவில் 2011 கணக்கெடுப்பின்படி 76 கோடிப்பேர் வயதுவந்தவர்கள். ஆனால் 2012-13 கணக்கின்படி, வருமான வரி செலுத்துவோர் வெறும் 2.9 கோடிப் பேர்தான். அதிலும், 18,358 பேர்தான் ஒரு கோடிக்கும் அதிகமான வருமானத்தைக் காட்டினார்கள். அதாவது, ஏராளமானோர் வரி ஏய்ப்புச் செய்கிறார்கள். இதேபோல இதர வரிகளுக்கும் புள்ளிவிவரங்களைத் தோண்டி அடுக்கலாம். அது இருக்கட்டும்.

நேரடி வரி வருவாய் குறைகிறது என்பதால் அரசு மறைமுக வரிகளை புதிதாக விதிக்கிறது அல்லது வரி விகிதங்களை அதிகப்படுத்துகிறது. நேரடி வரிகளை அதிகரித்தால் அது பளிச்சென எல்லாருக்கும் புரிந்து போகும், கூப்பாடு போடுவார்கள் என்பதாலும் மறைமுக வரிகளை உயர்த்துகிறது. மறைமுக வரிகளை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினால் அல்லது அறிமுகம் செய்தால் அது பலருக்கும் தெரிய வராது. உதாரணமாக, சேவை வரிகள் உயர்ந்தது இப்படித்தான். இந்தியாவில் வரி வருவாய் 100 ரூபாய் என்றால்,அதில் 30 ரூபாய்தான் நேரடி வரிகளிலிருந்து கிடைக்கிறது. 70 ரூபாய் மறைமுக வரிகளிலிருந்தே கிடைக்கிறது / அல்லது பிடுங்கப்படுகிறது.

ஆனால் மறைமுக வரிகளை அதிகரித்துக்கொண்டே போகவும் முடியாது. வருமான வரி, சொத்து வரி போன்ற நேரடி வரிகள் குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே பாதிப்பவை. ஆனால் மறைமுக வரிகள் எல்லாப் பிரிவு மக்களையும் - அவர்களே அறியாமல் - பாதிக்கக்கூடியது. ஆகவே, மறைமுக வரிகளை கூடிய வரையில் குறைப்பது அவசியம்.

மற்றொரு பக்கம் இத்தனை வரிகள் இருக்கும்போது, ஒரே பொருளுக்கு பல்வேறு வரிகள் விதிக்கப்படுவதும் நிகழ்கிறது. உதாரணமாக, ஒரு நபர் ஒரு பொருளை உற்பத்தி செய்ய கச்சாப் பொருளை வாங்கும்போது வரி செலுத்துகிறார். உற்பத்தி செய்தமைக்கு ஒரு வரி செலுத்துகிறார். அதை வாங்குகிற மொத்த விற்பனையாளர் வாட் வரி செலுத்துகிறார். அவரிடமிருந்து சில்லறை விற்பனையாளர் வாங்கும்போது அவரும் வரி செலுத்துகிறார். இப்படி, ஒரே பொருளுக்கு பலமுனைகளில் வரிகள் விதிக்கப்பட்டு, பொருளின் விலை அதிகமாகிறது.

இவற்றில் சிலவற்றை நீக்கி, ஒரு பொருளுக்கு ஒரே வரியாக ஆக்கினால் எப்படியிருக்கும்? அதுவும் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியாக வைத்தால் எப்படியிருக்கும்? அதுதான் ஜிஎஸ்டி. உலகின் பல நாடுகளும் ஜிஎஸ்டி முறையை ஏற்றுக்கொண்டுள்ளன. வரிஅமைப்பை எளிமைப்படுத்துவதால் இது வரவேற்கத் தகுந்த விஷயம்.

ஆஹா... மோடி அரசு மிகப்பெரிய சாதனை செய்துவிட்டது என்றோ, இது முதலில் காங்கிரஸ் அரசின் திட்டம்தான் என்றோ யாரும் பொங்கவும் வேண்டாம் புகையவும் வேண்டாம். காங்கிரஸ் அரசு கொண்டு வந்தபோது கடுமையாக எதிர்த்தது பாஜக. வழக்கம்போல இதிலும் யுடர்ன் அடித்திருக்கிறது. இந்தப்பதிவு அரசியல் கட்சிகளைப் பற்றியதல்ல. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இந்த மசோதா நிறைவேற முக்கியக் காரணமாக இருந்தது.

இந்தியாவில் வரவிருக்கும் ஜிஎஸ்டி என்பது இரண்டு வகை - மத்திய பொருட்கள் மற்றும் சேவை வரி (Central Goods & Service Tax - CGST), மாநில பொருட்கள் மற்றும் சேவை வரி (State Goods & Service Tax - SGST)

உற்பத்தி மற்றும் சேவை மீதான அடிஷனல் கஸ்டம்ஸ் டியூடி, எக்சைஸ் டியூடி போன்ற வரிகள் எல்லாம் மத்திய அரசின் கீழ் வருபவை. ஜிஎஸ்டி வரும்போது இந்த வரிகள் எல்லாம் போய்விடும்.
வாட், விற்பனை வரி, ஆடம்பர வரி, பொழுதுபோக்கு வரி, போன்றவை மாநில அரசின் கீழ் வருபவை. ஜிஎஸ்டி வந்தால் இவையும் போய் விடும்.

ஆக பல வரிகளுக்குப் பதிலாக, வரிக்கு மேல் வரிக்கு பதிலாக ஒரே வரி இருக்கும். நாடு முழுமைக்கும் ஒரே வகையான வரி என்னும்போது மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகமும் எளிமையாகும். வரி ஏய்ப்புக் குறையும். வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும். அந்த வகையில் இது வரவேற்கத்தக்க விஷயம். தமிழ்நாடு போன்ற உற்பத்தியில் முன்னேறிய மாநிலங்களுக்கு பின்னடைவும் உண்டு. அதற்கேற்ப மத்திய அரசு நிவாரணம் வழங்கவும் இப்போதைக்கு ஏற்பாடு உண்டு.

இப்போதைய நிலவரப்படி பலமுனை வரிகளால் வரிவிகிதம் சுமார் 25 சதவிகிதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரிவிகிதம் (18 விழுக்காடு என்று கூறப்படுகிறது) குறைவாக இருக்கும், எனவே நுகர்வோருக்குப் பயன் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. ஒருபக்கம் சில பொருட்களின் மீது ஜிஎஸ்டி காரணமாக விலைகள் குறையலாம். ஆனால் இப்போது சேவை வரி 15 விழுக்காடு, ஜிஎஸ்டி வரும்போது18 விழுக்காடு ஆகும். மருந்துகள் போன்ற சில பொருட்களுக்கு இப்போது வரி குறைவாக இருக்கலாம்,அது அதிகரிக்கும்.

மசோதா நிறைவேறி விட்டது. இது முதல் படிதான். வரி விகிதம், வரி வருவாய் பங்கீடு ஆகியவை குறித்து மத்திய அரசும் மாநில அரசுகளும் ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கும். மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும். இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். அப்புறம், இன்னொரு விஷயம் - அரசுக்கு பல்லாயிரம் கோடி வரி வருவாய் கிடைக்கச் செய்யும் பெட்ரோலியப் பொருட்கள், மதுபானம் ஆகிய பொருட்கள் ஜிஎஸ்டியின் கீழ் இப்போதைக்கு வராது.

சரி, உண்மையில் இதனால் உங்களையும் என்னையும் போன்ற நுகர்வோருக்குப் பயன் கிடைக்குமா?இதற்கான பதிலை நீங்கள எளிதாக ஊகம் செய்யலாம். எந்தவொரு அரசும் வரி விகிதத்தை சீரமைக்கிறது என்றால் அது வரிகளைக் குறைத்து தனது வருவாயைக் குறைக்கப்போவதில்லை,வருவாயை அதிகரிக்கத்தான் என்பது தெளிவான விஷயம். ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது என்று மகிழ்ச்சிக் கூத்தாடுகிறவர்கள் யார் யார் என்று பாருங்கள். பதில் புரிந்து போகும்.

http://pudhiavan.blogspot.in/2016/08/blog-post.html