கோவை குனியமுத்தூரில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்க சம்மேளனத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, சம்மேளனத் தலைவர் டி.துள சிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு சார்பில் கடந்த பட்ஜெட் கூட்டத்தின்போது சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்த ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.15.74 கோடி தொகையை, மாநில விதை மேம்பாட்டு மையம் சார்பில் ‘அம்மா விதைகள்' என்ற பெயரில் நியாயமான விலையில் வழங்குவதாக அறிவித்தார்கள். இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
வரும் 2016-ம் ஆண்டு முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல் படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நெல் உற்பத்தியில் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் இருப் பதால் எவ்விதமான வணிக வரியும் தமிழக அரசு இதுவரை விதிக்கவில்லை. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப் படும்போது, அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசிக்கு, அந்த வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் அறுவடைக் காலங்களில் நெல்லை காய வைப்பதற்கு விவசாயிகளுக்கும், அரிசி ஆலை வணிகர்களுக்கும் கூடுதல் மின்திறன் வசதி தேவை என்ற கோரிக்கையை நெடுநாளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தமிழக அரசு கவனத்தில் கொள்ளாமல் இருந்து வருவது வருத்தமடையச் செய்துள்ளது. எங்களது நியாயமான இந்த கோரிக்கையை அமல்படுத்த வேண்டும்.தமிழக அரசு விதித்து வரும் செஸ் வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். செஸ் வரி ரத்து செய்யப்பட்டால் பிற மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரிக்கும். விவசாயிகளிடம் நேரடியாக நல்ல விலை கொடுத்து வணிகர்கள் வாங்கும்போது உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
TAMIL THAE HINDU DAILY 20.05.2015
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7224581.ece
No comments:
Post a Comment