ஒன்பதாண்டுகளாக முடங்கிக் கிடக்கும், சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. சர்ச்சைக்குரிய அந்த மசோதா, லோக்சபாவில் நேற்று நடைபெற்ற ஓட்டெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசுக்கு பலம் குறைவாக உள்ள ராஜ்யசபாவில், இன்று அந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.நிச்சயம் கடும் பலப்பரீட்சையை அங்கு அந்த மசோதா சந்திக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மறைமுக வரிகளாக உள்ள, கலால் வரி, சேவை வரி, மாநிலங்களின், 'வாட்' எனப்படும் மதிப்பு கூடுதல் வரி, நுழைவு வரி போன்ற பல வரிகளை ஒன்றிணைத்து, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி முறை, 2006ல், அப்போதைய, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வரையப்பட்டது.நாடு முழுவதும் ஒரே வரி முறையான, இந்த புதிய வரி முறையை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டியிருந்ததால், அதுகுறித்து மாநிலங்களுடன் பேசி கருத்தொற்றுமை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட வரி, முறையாக இருந்தாலும், அந்த வரியை செயல்படுத்த, மோடி தலைமையிலான அரசு உறுதிகொண்டது. அடுத்த ஆண்டு, ஏப்ரல் 1 முதல் செயல்படுத்த இலக்கு நிர்ணயித்தது.
பல இழுபறிகளுக்குப் பின், அந்த மசோதா, சமீபத்தில், லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று அந்த மசோதாவை நிறைவேற்ற, சபையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பல திருத்தங்கள் மேற்கொள்ள, எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன; அவை, ஏற்கப்படவில்லை.மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக, பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு மசோதாவை அனுப்ப வேண்டும் என, காங்கிரஸ் பிடிவாதம் பிடித்தது. எனினும், அதை, நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஏற்றுக் கொள்ளவில்லை.''இது, நடனப்பொருள் அல்ல; ஒரு நிலைக்குழுவில் இருந்து இன்னொரு நிலைக்குழுவுக்கு, அவ்வப்போது மாற்ற,'' என, அவர், காட்டமாக கூறினார்.மாநிலங்கள் இப்போது வசூலித்து வரும் வரி வருவாயை, ஜி.எஸ்.டி.,யால் இழக்க நேரிடுமே, அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என, எம்.பி.,க்கள் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் அருண் ஜெட்லி அளித்த பதில் திருப்திகரமாக இருந்ததால், மேற்கொண்டு திருத்தங்கள் கோராமல், திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ் போன்ற கட்சிகள் அமைதி காத்தன.
அதன் பின், இந்த மசோதா, ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. மசோதாவுக்கு, ஆதரவாக, 352 ஓட்டுகளும், எதிராக, 37 ஓட்டுகளும் கிடைத்தன. இதையடுத்து, ஜி.எஸ்.டி., மசோதா, லோக்சபாவில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. அந்த நேரம், பிரதமர் மோடி, சபையில் இல்லை.மசோதா குறித்து, அமைச்சர் அருண் ஜெட்லி பேசும் போது, ''நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த மசோதா நிறைவேறி, நாடு முழுவதும் ஒரே வரி முறை அமலானால், மறைமுக வரி முறையில், புதிய சகாப்தம் படைக்கப்பட்ட பெருமை கிடைக்கும்,'' என்றார்.
முன்னதாக, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்., - எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்ட போது, அவர்களை கண்டிக்கும் விதமாக பேசிய அருண் ஜெட்லி, ''இந்த மசோதாவை நிறைவேற்ற பாடுபட்ட உங்கள் கட்சியை சேர்ந்த சிதம்பரம் உட்பட, பல நிதியமைச்சர்களை நீங்கள் மறந்தாலும், நாங்கள் நாட்டின் நலனை விட்டுக் கொடுக்க முடியாது,'' என்றார்.
லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, இன்று, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ராஜ்யசபாவில், பா.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், நில மசோதா உட்பட பல மசோதாக்கள் முடங்கிக் கிடக்கின்றன.அந்த நிலை, ஜி.எஸ்.டி., மசோதாவுக்கும் ஏற்படாது என்றே கூறப்படுகிறது. ஏனெனில், பிற மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு காட்டிய காங்கிரஸ், இந்த மசோதாவை தயாரித்தது என்பதால், கடும் எதிர்ப்பு காட்டாமல், ஓட்டெடுப்புக்கு விடப்படும் போது, வெளிநடப்பு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

3 ஆண்டுகளுக்கு 100 சதவீத இழப்பீடு:
'மாநிலங்கள் தங்கள் நிதி ஆதாரங்களை இழப்பதால், அதை எவ்விதம் சரிக்கட்டுவீர்கள்?' என, எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து, அருண் ஜெட்லி கூறியதாவது:நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான, இந்த புதிய, மறைமுக வரி முறை அமலாகும், முதல் மூன்று ஆண்டுகளுக்கு, 100 சதவீத இழப்பீட்டை மாநிலங்களுக்கு வழங்குவோம். அதற்கு அடுத்த, நான்காவது ஆண்டில், 75 சதவீத இழப்பீடும், ஐந்தாவது ஆண்டில், 50 சதவீத இழப்பீடும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட, லோக்சபா துணை சபாநாயகரும், அ.தி.மு.க., மூத்த எம்.பி.,யுமான தம்பிதுரை, ''ஐந்தாண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவீர்கள். அதற்குப் பின், மாநிலங்கள் நஷ்டத்தை சந்தித்தால் என்ன செய்வீர்கள்?'' என்றார்.
அதற்கு பதிலளித்த அருண் ஜெட்லி, ''எந்தச் சூழ்நிலையிலும் மாநிலங்கள் பாதிப்படைய அனுமதிக்க மாட்டோம். அவர்களின் இழப்புத்தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்,'' என்றார்.

வரி எவ்வளவு இருக்கும்?
ஜி.எஸ்.டி., வரிமுறை அமல்படுத்துவதற்கான வல்லுனர் குழு, 27 சதவீத வரி விதிக்க வேண்டும் என, பரிந்துரை செய்துள்ளது. எனினும், அந்த வரி அதிகமாக இருப்பதாக கருத்து தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ''கண்டிப்பாக, 27 சதவீத வரி விதிக்கப்பட மாட்டாது. சற்று குறைவாகவே இருக்கும்,'' என்றார்.
முன்னர், 20 சதவீத, ஜி.எஸ்.டி., வரி விதிக்கலாம் என, பரிந்துரை செய்யப்பட்ட போது, 20 சதவீதத்தை மத்திய அரசும், 8 சதவீதத்தை அந்தந்த மாநிலங்களும் பகிர்ந்து கொள்வது என, முடிவு செய்யப்பட்டது.ஆனால், இப்போது, ஜி.எஸ்.டி., வரி எவ்வளவு என்பது முடிவாகாததால், எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதும் முடிவு செய்யப்படவில்லை.இந்தியா முழுமையும் ஒரே சந்தை என்ற நிலை, இந்த மசோதா சட்டமானால் ஏற்படும். தொழில் துறைக்கு ஊக்கம் கிடைக்கும். இந்த வரிமுறையில் வியத்தகு சாதனையாக இருக்கும்.
சந்திரஜித் பானர்ஜி,
இந்திய தொழில் கூட்டமைப்பு தலைமை இயக்குனர்
இந்த மசோதா சட்டமானால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், கூடுதலாக, 1.5 சதவீத வளர்ச்சி ஏற்படும். உலகளாவிய முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு வரச் செய்யும்.
- டி.எஸ்.ராவத்,
'அசோசேம்' எனப்படும், இந்திய வர்த்தக சபை முதன்மை செயலர்
ராஜ்யசபாவில் எதிர்ப்பை சந்தித்தாலும், எப்படியும் அங்கு நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. எப்படியாகிலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலாகிவிடும். ஆனால், அந்த வரிமுறையை சந்திக்க, தொழில் மற்றும் வர்த்தகத் துறையினர், எந்த அளவுக்கு தயாராக இருப்பர் என்பது கேள்விக்குறியே.
பிரதிக் ஜெயின்,
கே.பி.எம்.ஜி., தொழில் ஆலோசனை நிறுவனம்.
பா.ஜ., போல, நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள், ஜி.எஸ்.டி., வரிமுறையை ஆதரிக்கின்றன. எனவே, ராஜ்யசபாவில் சிக்கலின்றி நிறைவேறும் என, எதிர்பார்க்கலாம்.
விவேக் மிஸ்ரா,
பிரைஸ்வாட்டர்கூப்பர் தர நிர்ணய ஆலோசனை
வர்த்தக நடைமுறையை எளிதாக்கும் இந்த வரிமுறை, லோக்சபாவில் நிறைவேறியதே பெரிய சாதனை தான்.
சலோனி ராய்,
dinamalar 7.5.15

No comments:
Post a Comment