பொருட்களை உற்பத்தி செய்து, விற்கும் போது, அவற்றின் மீது, கலால் வரி, சேவை வரி, ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலத்திற்கு, அந்தப் பொருட்களை கொண்டு செல்லும் போது நுழைவு வரி, மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள, மதிப்பு கூட்டு வரியான - 'வாட்' வரி என, பல விதமான வரிகள் விதிக்கப்படுகின்றன. அதேநேரத்தில் பொருட்களை இறக்குமதி செய்தால், அவற்றின் மீது சுங்க வரி விதிக்கப்படுகிறது. இப்படி, ஒரு பொருளின் மீது, பலவிதமான வரிகள் விதிக்கப்படுவது, வரி கட்டமைப்பை சீர்குலைப்பதோடு, பொதுமக்களுக்கு வரிச்சுமையையும் அதிகரிக்கிறது. இதனால், பொருளாதாரத்தில், பாதகமான விளைவுகள் ஏற்படுவதாகவும், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்னைகளை தீர்க்க, மத்திய, மாநில அரசுகள் விதிக்கும், பல விதமான மறைமுக வரிகளையும் ஒன்றிணைத்து, ஒரே வரியாக்க, மத்திய அரசு எடுத்த நடவடிக்கையே, ஜி.எஸ்.டி., என, அழைக்கப்படும் சரக்குகள் மற்றும் சேவை வரி. ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்தால், மறைமுக வரிகளான உற்பத்தி வரி, சேவை வரி போன்றவை விதிக்கப்படாது. மத்திய அரசால் விதிக்கப்படும், இந்த இரு வரிகளும் இல்லாமல் போகும். அதேநேரத்தில், மாநில அரசால் விதிக்கப்படும், வாட் வரியும் விலக்கிக் கொள்ளப்படும். மத்திய, மாநில அரசுகள் தரப்பில், ஒரு முனை வரி விதிப்பே அமலில் இருக்கும்.
dinamalar
24.4.2015
dinamalar
24.4.2015
No comments:
Post a Comment