Wednesday, 31 January 2018

நாடு முழுவதும் ஒரே நாளில் ஜூன் 1-ம் தேதியிலிருந்து இ-வே பில் அமலாக்கம்: தொழில்துறையினர் கோரிக்கை

மாநிலங்களுக்குள் இடையில் நடைபெறும் சரக்கு பரிமாற்றத்துக்கான இ-வே பில் நடைமுறை ஜூன் 1-ம் தேதியிலிருந்து அமலாக்க வேண்டும் என தொழில்துறையினர் கூறியுள்ளனர்.
ஜிஎஸ்டி சட்டம் அமலாக்கப்பட்ட பின்னர் மாநிலங்கள் இடையே நடைபெறும் சரக்கு போக்குவரத்துக்கான இ-வே பில் முறையில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நடைமுறையை பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தது. இதற்கு 15 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்தன. இந்த நிலையில் இ-வே பில் நடைமுறையை நாடு முழுவதும் ஒரே நாளில் அமல்படுத்தும் வகையில் ஜூன் 1-ம் தேதியிலிருந்து அமல்படுத்த வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தொழில் துறையினர் கூறுகையில், இ-வே பில் நடைமுறைப்படுத்துவதில் நாடு முழுவதும் குழப்பம் நீடித்து வருகிறது. 15 மாநிலங்கள் மட்டும் இதை ஏற்றுக் கொண்டு, பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து அமல்படுத்த உள்ளதாக அறிவித்தன. இத னால் தொழில்துறையில் மிகப் பெரிய குழப்பம் உருவானது. சில மாநிலங்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் அமல்படுத்துவதற் கான தேதியை முடிவு செய்தாலும், ஜூன் 1-ம் தேதிக்குள் அனை த்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும் என அறிவிக்கலாம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
மாநிலங்களுக்குள் நடக்கும் சரக்கு பரிமாற்றத்துக்கு ஒவ் வொரு முறையும் இ-வே பில் கட்டாயம் என்பது தொழில் துறையை முடக்கக்கூடியது. மாநிலங்களுக்குள் நடக்கும் சரக்கு போக்குவரத்துக்கான நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் இ-வே பில் தொடர்பாக ஆவணங்களை பதிவு செய்யும் வசதி உருவாக்கப்படவில்லை என்றும் கூறினர். இது தொடர்பாக பேசிய டெலாய்ட் நிறுவனத்தின் பங்குதாரர் எம்.எஸ்.மணி கூறுகையில், ஜிஎஸ்டி தொடர்பாக அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன்பு நாடு முழுவதும் ஒரே நடைமுறை, ஒரே வகையான மென்பொருள், கணக்கு முறைகள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மாநிலங்களுக்குள் நடக்கும் சரக்கு போக்குவரத்துக்கு இ-வே பில் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிகப் பெரிய அளவில் பாதிப்பு உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்


http://tamil.thehindu.com/business/article22606958.ece

No comments:

Post a Comment