Wednesday, 31 January 2018

கோவை, திருப்பூரில் நாளை முதல் நடைமுறை இ-வே பில் இல்லாவிட்டால் சரக்குகள் பறிமுதல், அபராதம்

: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு பின் கடந்த 6 மாதமாக 30 சதவீதம் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வருவாயை அதிகரிக்கும் வகையில், நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ள சரக்குகளுடன் இ-வே பில் உள்ளதா என்பதை கண்காணிக்க 3 மாவட்டத்திலும் 6 துணை கமிஷனர்கள் மற்றும் 45 உதவி கமிஷனர்கள் களம் இறங்குகின்றனர்.  கோவை கோட்ட வணிகவரி இணை கமிஷனர் அலுவலகம் வணிகவரி மற்றும் அமலாக்கம் ஆகிய இணை கமிஷனர்கள் தலைமையில் உள்ளது. கோவையில் 3 வரி விதிப்பு மாவட்டங்கள், திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி ஆகியவற்றில் தலா ஒரு வரி விதிப்பு மாவட்டங்கள் என மொத்தம் 6 வரி விதிப்பு மாவட்டங்கள் 6 துணை கமிஷனர்கள் தலைமையில் உள்ளது. இதில் 45 வரி விதிப்பு வட்டங்கள் 45 உதவி கமிஷனர்கள் தலைமையில் உள்ளது. இதில் 1.10 லட்சம் பதிவு பெற்ற வணிக நிறுவனங்கள் இருந்தன. இவற்றின் மூலம் மாதம்தோறும் சராசரியாக 500 கோடி வணிகவரி வருவாய் கிடைத்து வந்தது.

இதில் வணிகவரி பதிவு பெற்ற நிறுவனங்களில் 98 சதவீத நிறுவனங்கள் ஜிஎஸ்டி பதிவின் கீழ் வந்தன. கடந்த ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை கடந்த 6 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் முந்தைய வரி வருவாயோடு ஒப்பிடுகையில் 70 சதவீதம் மட்டுமே வசூலாகியுள்ளது. 30 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது.  ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பிறகு வரி வருவாய் குறைந்ததற்கு, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள கிரானைட், டைல்ஸ், மார்பிள்ஸ், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் பில் இல்லாமல் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

 இந்நிலையில், நாளை முதல் இ-வே பில் உடன் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சரக்குகள் அனுப்புவது கட்டாயமாகியுள்ளது. வரி வருவாயை அதிகரிக்க இ-வே பில் ரெய்டை தீவிரப்படுத்த கோவை கோட்ட மாநில ஜிஎஸ்டி அலுவலகத்தினர் நாளை முதல் களமிறங்குகின்றனர்.
 இது குறித்து கோவை மண்டல மாநில ஜிஎஸ்டி அலுவலகம் (வணிகவரி) தரப்பில் கூறுகையில், ‘‘நாளை முதல் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளடங்கிய கோவை கோட்டத்தில் சரக்கு வாகனங்களில் இ-வே பில் உள்ளதாக என்பதை பரிசோதிக்க 6 துணை கமிஷனர்கள், 45 உதவி கமிஷனர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் களமிறங்குகின்றனர். இ-வே பில் இல்லாத சரக்குகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என்றனர்.



http://www.dinakaran.com/News_detail.asp?Nid=371636

No comments:

Post a Comment