நாடு முழுவதும் வரி விதிப்பு ஒரே முறையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு கொண்டு வரும் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் 5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை வரி விதிக்கும் 4 அடுக்கு முறையை அமல் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு வரி இல்லாத நிலை கொண்டு வரப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) அமல் படுத்தியுள்ளது. ஒரு பொருளுக்கு பல மாநிலங்களில் விதிக்கப்படும் வரியை தவிர்ப்பதற்காக இந்த வரிமுறை கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஒரே விதமான வரி முறையாக ஜி.எஸ்.டியை கொண்டு வருவதாக மத்திய அரசு கூறியது. இந்த வரி விதிப்பு முறை வருகிற 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த வரி விதிப்பு முறையால், தமிழகம் உள்பட பல மாநிலங்களுக்கு கிடைக்கும் வருவாயில் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.
இந்த வருவாய் இழப்பை ஜி.எஸ்.டி அமலான முதல் 5 ஆண்டுகளுக்கு அளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இந்த வரி முறையை அமல் படுத்துவது தொடர்பாக உரிய முடிவுகளை எடுக்க ஜி.எஸ்.டி கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலின் இரண்டு நாள் கூட்டத்தில் முதல் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விபரம் வருமாறு.,
ஜி.எஸ்.டி வரி விதிப்பில் 4 அடுக்கு முறையில் வரிகள் விதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பொருளுக்கு ஏற்றாற்போல் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்கு நிலைகளில் வரி விதிக்க ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு வரி இல்லாத நிலை கொண்டு வரப்படுகிறது.
பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிப்பு இருக்கும். இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 2 நாள் நடக்கும் ஜி.எஸ்.டி கவுன்சிலின் முதல் நாள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தற்போது அதிகப்பட்சமாக 30 -31 சதவீதம் வரி விதிக்கப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டியின் அதிக பட்ச வரி விதிப்பான 28 சதவீதம் இருக்கும். தற்போது 29 % வரி விதிப்பில் உள்ள தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், இன்வெர்ட்டர், மின்விசிறி ற்றும் சமையல் சாதனங்களுக்கு இனிமேல் 28 % ஜி.எஸ்.டி. வரியே விதிக்கப்படும்.
சொகுசு கார்கள், புகையிலை, செயற்கை பானங்கள் ஆகியவற்றுக்கு வரி விதிப்புடன் கூடுதல் செஸ் வசூலிக்கப்படும். இந்த செஸ் வருவாய் மூலம், ஜி.எஸ்.டி வரி விதிப்பால் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு வரி விதிப்பு அமலான முதல் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு அளிக்கப்படும். கூடுதல் செஸ் வரி மற்றும் தூய எரி சக்தி செஸ் வரி வருவாய் இழப்பு ஏற்படும். மாநிலங்களுக்கு அளிக்க பயன்படுத்தப்படும். இந்த செஸ் வரி 5 ஆண்டுகளுக்கு பின்னர் காலாவதியாகும். அதன் பின்னர் அந்த வரி விதிப்பு இருக்காது.
ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலாவதால் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு நஷ்ட ஈடு தர ரூ.50 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. கலால் வரி , சேவை வரி , வாட் வரி விதிப்பை தவிர்ப்பதால் ஏற்படும் இழப்பை சரி கட்ட இந்த நஷ்ட தொகை ஜி.எஸ்.டி அறிமுகம் ஆகும் முதல் ஆண்டில் அளிக்க வேண்டி இருக்கும். தங்கத்திற்கு 4 சதவீத வரி விதிக்க ஆலோசிக்கப்படுகிறது. ஆனால் அது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் அதிக வருவாய் இழப்பை கேரள மாநிலம் சந்திக்கும் என கூறப்படுகிறது. இதனால் அந்த மாநிலத்திற்கு அதிகளவில் நஷ்ட ஈட்டை மத்திய அரசு அளிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.
ஜி.எஸ். வரி விதிப்பு குறித்து பல மாநிலங்களின் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பல மாநிலங்களில் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் வந்தநிலையில், தற்போது அந்த வரி விதிப்பு அமல் படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.thinaboomi.com/2016/11/03/61153.html
No comments:
Post a Comment