நான்கு அடுக்கு சரக்கு மற்றும் சேவை வரிக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. 5,12,18 மற்றும் 28 சதவீத வரி விதிப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. முக்கியமான பொருட்களுக்கு குறைந்த வரியும், சொகுசு பொருட்களுக்கு அதிக பட்ச வரியும் விதிக்க முடிவெடுக்கப் பட்டிருக்கிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பெரும்பான்மையான உணவுப் பொருட்களுக்கு வரி விதிப்பு கிடையாது. முன்னதாக நிதி அமைச்சகம் 6%, 12%, 18% மற்றும் 26 சதவீதத்தை பரிந்துரை செய்திருந்தது.
அடுத்த வருடம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டியை அமல்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடந்த ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் வரி விகிதம் குறித்த முடிவு எடுக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி குறித்து அருண் ஜேட்லி மேலும் கூறியதாவது: தற்போது 30 முதல் 31 சதவீத வரி வரம்புக்குள் இருக்கும் பொருட்கள், ஜிஎஸ்டியின் அதிக பட்ச வரி வரம்புக்குள் வரும்.
சொகுசு கார்கள், புகையிலை, வாயு நிரப்பப்பட்ட குளிர்பானங் களுக்கு அதிகபட்ச வரியும் செஸ் வரியும் விதிக்கப்படும். கூடுதல் செஸ் மற்றும் பசுமை வரி ஆகியவை மூலம் வருவாய் இழப்பு மாநிலங்களுக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிதி உதவி அளிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு பிறகு செஸ் வரி காலாவதியாகி விடும்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப் படுவதினால் முதல் ஆண்டில் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்ய ரூ.50,000 கோடி தேவைப்படும்.
தங்கத்துக்கு 4 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு பரிந்துரை செய்தது. ஆனால் இறுதி முடிவு தள்ளிப்போடப்பட்டது. எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்பது குறித்தும் பின்னர் முடிவெடுக்கப்படும் என்று ஜேட்லி கூறினார். ஜிஎஸ்டி அமல்படுத்தி, அதனால் ஏற்படும் விளைவுகளை ஆராய்ந்த பிறகு தங்கத்தின் மீதான வரி குறித்து முடிவெடுக்கப் படும்.
கேரள மாநில நிதி அமைச்சர் அதிகபட்ச வரியாக 40 சதவீதம் இருக்க வேண்டும் என பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று தொடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்றும் கூடி, நிர்வாக அதிகார விஷயங்கள் குறித்து முடிவெடுக்கிறது.
.
http://tamil.thehindu.com/business/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-5-12-18-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-28-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article9304470.ece?homepage=true
No comments:
Post a Comment