சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக வணிகர்களுக்கு தற்காலிகமாக ஐ.டி. மற்றும் கடவுச்சொல் வழங்கப்பட உள்ளதாக வணிகவரித்துறை தெரிவித்துள்ளது.
புதுவை வணிகவரித்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தற்காலிக ஐ.டி.
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக வணிக வரித்துறையில் பதிவு பெற்றுள்ள அனைத்து வணிகர்களுக்கும் ஜி.எஸ்.டி.என் தளத்திற்கு மாற்றுவதற்கான தற்காலிகமாக ஐ.டி. மற்றும் கடவுச்சொல் வழங்க வேண்டி உள்ளது.
புதுச்சேரி அரசு வணிக வரித்துறை தமது இணைய தளமான http://gst.puducherry.gov.in.–ல் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வணிகர்கள் அனைவரும், தங்களுக்கு தற்காலிக ஐ.டி. மற்றும் கடவுச்சொல் பெறுவதற்காகவும், ஜி.எஸ்.டி.என். ஒதுக்கீடு செய்வதற்கும், தங்களது கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை சரிபார்த்து உறுதிபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த அறிவிப்பு குறுஞ்செய்தி மூலமாகவும் அனைத்து வணிகர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மின்னஞ்சல்
வணிகவரித்துறை இணையதளத்தில் வணிகர்கள் நுழைந்ததும் அவர்களுடைய கைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரிபார்த்து உறுதிப்படுத்துமாறு கோரப்படுகிறார்கள். மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண்ணை உறுதிபடுத்திய வணிகர்களுக்கு தற்காலிக ஐ.டி. மற்றும் கடவுச்சொல் அனுப்பப்படும். இதுவரை அவ்வாறு உறுதிப்படுத்தாத வணிகர்கள் உடனடியாக மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண்ணை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதுகுறித்து சந்தேகங்கள் இருப்பின் வணிக வரித்துறையின் இணையதளமான http://gst.puducherry.gov.in–ன் முகப்பு பக்கத்தில் உள்ள விளக்கங்களை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment